வரும் திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கும் வேளையில் நாட்டில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் அவற்றின் சேவை நிலைக்குத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் வழிவகைகளைச் சுகாதார அமைச்சு தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கையினால் ஈடுபட்டால் நோயாளிகள், காயம் அடைந்தவர்கள் , குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் மருத்துவச் சேவையை பெறுவதில் பிரச்னையை எதிர்நோக்கக்கூடும் என்பதையும் அவர் விளக்கினார்.
ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அது வரையில் அவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா கேட்டுக்கொண்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


