கோலாலம்பூர், அக்டோபர்.13-
ஊழல் செய்பவர்கள் முக்கிய நபர்களாக இருந்தாலும் கூட, அவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனுக்காக, ஊழல் செய்பவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் அமலாக்க நடவடிக்கைகளைப் பாதுகாக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் புரிபவர்களுக்கு எதிராக முறையான ஆதாரங்கள் இருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளை அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு தானே முன்வந்து பாதுகாப்பு அளிக்கத் தயார் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








