கோலாலம்பூர், அக்டோபர்.30-
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டாகும். இதனையொட்டி கோலாலம்பூர் மாநகர் மன்றம் 46 லட்சம் சுற்றுப்பயணிகளை வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாக டத்தோ பண்டார் மைமூனா முகமட் ஷாரிஃப் தெரிவித்தார்.
ஆயத்த நடவடிக்கையாக கோலாலம்பூர் மாநகரின் கட்டமைப்பு முறையைத் தூய்மைப்படுத்துதல், மாநகரில் வண்ண விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் கோலாலம்பூரில் ஓர் அர்த்தம் பொதித்த அனுபவத்தை ஒவ்வொரு வருகையாளரும் பெறும் பொருட்டு உள்ளூர் சமூகத்தின் பங்கேற்பு நடவடிக்கைகள் முதலியவை தயாராகி வருவதாக டத்தோ பண்டார் குறிப்பிட்டார்.
46 மில்லியன் சுற்றுப்பயணிகள் என்பது அடுத்த ஆண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை உள்ளடக்கிய எண்ணிக்கையாகும் என்று அவர் மேலும் கூறினார்.








