May 5, 2026
Thisaigal NewsYouTube
மாவட்ட போலீஸ் தலைவரைக் காயப்படுத்திய பையனுக்கு 100 மணிநேரச் சமூக சேவைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

மாவட்ட போலீஸ் தலைவரைக் காயப்படுத்திய பையனுக்கு 100 மணிநேரச் சமூக சேவைத் தண்டனை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.04-

கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாருவில் வீடுகளைக் காலி செய்யும் நடவடிக்கையின் போது, அப்போதைய டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவர் சுலிஸ்மி அஃப்பெண்டி சுலைமான் மீது கற்களை வீசிக் காயப்படுத்திய 16 வயது பையனுக்கு 100 மணி நேரச் சமூக சேவை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் நூர்ஃபாராஹயின் ரோஸ்லான் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் அந்தப் பையன் அடுத்த 6 மாத காலத்திற்குள், சமூக நலத்துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த 100 மணி நேரச் சமூக சேவையைச் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி காலையில், ஜாலான் டத்தோ அப்துல் மாலிக் பகுதியில் மின்சாரத் துண்டிப்பு மற்றும் வீடுகளைக் காலி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி சுலிஸ்மி அஃப்பெண்டியைத் தாக்கி காயப்படுத்தியதாக பையன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி வீடுகளை இடிக்கும் பணி நடந்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், அடையாளம் தெரியாத நபர் வீசிய பொருள் பட்டு போலீஸ் அதிகாரியின் தலையில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்தச் சிறுவன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்