ஜோகூர்பாருவில் ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங்துவா மாவீரர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான சிறார் தினத்தை முன்னிட்டு அல்தாமிஸ் ஃபைஸ் ஷாஹ்ருலிசாம் என்ற அந்த சிறுவனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டு, பதக்கமும் அணியப்பட்டது.
வீரத்தை குறிக்கும் கிரிஸ் கத்தியை தாங்கிய கேடயமும் சிறுவனுக்கு வழங்கப்பட்டது.
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் தீயின் மத்தியில் அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பி, அவர்களை தீயிலிருந்து காப்பாற்றிய துணிகர செயலுக்காக அந்த ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங் துவா விருது வழங்கப்பட்டது.








