புத்ராஜெயா, அக்டோபர்.02-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரிக்குச் சொந்தமான 169 மில்லியன் ரிங்கிட் பணத்தை அவர் உரிமை கோருவதிலிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ள வேளையில் அவருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்யும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இஸ்மாயில் சப்ரிக்கு மிக நெருக்கமான உதவியாளர் ஒருவரின் வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து மீட்டகப்பட்ட அந்தப் பணத்தை பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து இஸ்மாயில் சப்ரி எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனினும் இவ்விவகாரத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பணம், மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.








