Mar 14, 2026
Thisaigal NewsYouTube
வரிப்புலி வலையில் சிக்கியது
தற்போதைய செய்திகள்

வரிப்புலி வலையில் சிக்கியது

Share:

ஈப்போ, உலு கிந்தா அருகே மக்கள் குடியிருக்கும் பகுதியில் நடமாடியதாகக் கூறப்படும் வரிப்புலி ஒன்று வலையில் சிக்கியது.

4 வயதை எட்டியதாக நம்பப்படும் அந்த ஆண் புலி, இன்று காலை 4.30 மணி அளவில் RPT தஞ்சோங் டாமாய் வீடமைப்புப் பகுதியில் பிடிபட்டது.

பேரா மாநில வனவிலங்கு பாதுகாப்பு, வனப்பூங்கா துறையின் இயக்குநர் யூசோஃப் ஷாரிஃப் தெரிவிக்கயில், 90 கிலோ எடையுள்ள அந்தப் புலி, வைக்கப்பட்ட வலையில் சிக்கிய பின்னர், மயக்க மருந்தை துப்பாக்கியின் மூலம் செலுத்தப்பட்டது.

முன்னதாக, அந்தப் புலியை காட்டிற்குள் விரட்டும் முயற்சி தோல்வி கண்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிடிபட்ட அந்தப் புலி,ளாடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சுங்காயில் உள்ள தேசிய வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்படும்

சுங்ஙாய் தொங்காங் பூர்வக் குடிமக்கள் குடியிருப்புப் பகுதி முதல் உலு கிந்தாவுல் உள்ள கெம் பசுக்கான் கெராக்கான் ஆம் வரையில் 5 உலிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தத் தகவல் உண்மையில்லை எனக் கூறிய அவர், அப்பகுதியில் நடமாடிய ஒரே புலி தற்பொழுது பிடிபட்டு விட்டது என்றார்.

Related News