Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

Share:

மலேசியாவில் மானியமில்லாத எரிபொருட்களான RON97 மற்றும் தீபகற்ப மலேசியாவிற்கான டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களின் நேரடி விளைவின் எதிரொலியே என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய நிதி அமைச்சின் அறிவிப்பின்படி, RON97, ஒரு லிட்டருக்கு 70 சென் உயர்ந்து 4 ரிங்கிட் 55 சென்னாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லா RON95 விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் 3 ரிங்கிட் 27 சென்னாக உள்ளது. நுசான்டாரா வியூக ஆராய்ச்சி அகாடமியின் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஹசான் கூறுகையில் , சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை சுமார் 60-65 அமெரிக்க டாலர்களில் இருந்து 110 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

70 முதல் 80 விழுக்காடு வரையிலான இந்த விலை உயர்வு, உள்நாட்டு மானியமில்லாத எரிபொருள் விலையில் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதது என்று அவர் விளக்கியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மலேசியா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும், உள்நாட்டு பயன்பாட்டிற்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை இறக்குமதி செய்வதால், சர்வதேச விலை மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு விலையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

எனினும் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்ந்தாலும், புடி95 மற்றும் புடி மதானி போன்ற இலக்கு சார்ந்த மானியத் திட்டங்கள் மூலம் தகுதியுள்ள மலேசியர்களுக்கு அரசு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருவது, சாமானிய மக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் அஸ்மி உட்பட பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்ள்ளனர். அதேவேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் பட்சத்தில், மலேசியாவிலும் RON97 மற்றும் டீசல் விலைகள் மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News