கோலாலம்பூர், செப்டம்பர்.05-
தமது மலேசிய பயணத்தின் போது, மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்ட பதின்ம வயதுடைய ஒரு பிரிட்டிஷ் பிரஜையான டேவிட் பாலிசோங் என்பவர் கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
அந்த பிரிட்டிஷ் பிரஜை, கோலாலம்பூர், ஜாலான் புடுவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு 7 மணியளவில் போலீஸ் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பட்டார்.
அந்த வெளிநாட்டு நபரின் உடல்நிலை குறித்து தற்போது ஆராயப்பட்டு வரும் வேளையில் இது தொடர்பாக பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என்று ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
பிரிட்டன், கிரேட்டர் மான்செஸ்டர், Cheadle- ஐ வசிப்பிடமாகக் கொண்ட அந்த பிரிட்டிஷ் பிரஜை கடந்த ஜூன் 6ஆ ம் தேதி மலேசியாவிற்கு வந்ததாக குடிநுழைவு பதிவுகள் காட்டுகின்றன.








