கோலாலம்பூர், நவம்பர்.01-
இன்று சனிக்கிழமை காலை பெட்ரோனாஸ் டவர் 3 கட்டிடத்தின் மேல்தளத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தீ பற்றிக் கொண்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கோலாலம்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்றாலும், இவ்விபத்தில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பதை கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநரும், மூத்த உதவி ஆணையருமான ஹசான் அசாரி ஒமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
மெனாரா சாரிகாலி என்றழைக்கப்படும் இந்த 60 மாடிகள் கொண்ட பெட்ரோனாஸ் டவர் 3-ஆனது பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.








