Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கழிப்பறையின் சுத்தத்தை உறுதிப்படுத்துவீர் !
தற்போதைய செய்திகள்

கழிப்பறையின் சுத்தத்தை உறுதிப்படுத்துவீர் !

Share:

அரசாங்கம் 578.02 மில்லியன் ரிங்கிட் செலவு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறையை சீரமைத்துக் கொடுத்துள்ளது. அவை தூய்மையாக இருப்பதை ஆசிரியர்களும் மாணவர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மாதம் வரையில் கல்வி அமைச்சின் கீழ் இருக்கும் பள்ளிகளும் இதரக் கல்வி நிலையங்களும் உட்பட 8 ஆயிரத்து 20 பள்ளிகளுக்கு அந்த நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, அவற்றின் சுத்தம் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் பொறுப்பு என்றார் அவர்.

அனைத்துப் பள்ளிகளுகும் 70 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே அந்த மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையவில்லை.

மாணவர்கள் சிறந்த சூழலில் கல்வியை மேற்கொள்வதில் அமைச்சு கவனத்தைச் செலுத்தி வருவதாகவும் அதற்கான நடவடிக்கைகளும் திட்டங்களும் அவ்வப்போது முறையாக எடுக்கப்பட்டு வருவதாகவும் லிம் ஹுய் யிங் மேலும் சொன்னார்.

Related News