ஜோகூர், மூவார், கம்போங் சபாக் ஆவோர் என்ற இடத்தில் வீடு ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் உயிரிழந்தனர். இத்துயரச்சம்பவம் நேற்று இரவு 7.40 மணியளவில் நிகழ்ந்தது. தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட நிலையில், வீட்டிலிருந்து தப்பிக்க இயலாமல் தீயின் ஜுவாலையில் சிக்கி 3 முதல் 8 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்களும் , இரண்டு சிறுமிகளும் மாண்டனர்.
80 விழுக்காடு சாம்பலான அந்த வீட்டில், நான்கு உடன்பிறப்புகளில் உடல்கள், குளியல் அறையில் கண்டு பிடிக்கப்பட்டதாக மூவார் மாவட்ட தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி ஷாரிசால் மொக்தார் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மூவார் மற்றும் கம்பீர் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 20 வீரர்கள், தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் முழு வீச்சில் அணைத்து, நான்கு சிறார்களின் உடல்களை மீட்டனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக ஷாரிசால் மொக்தார் குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


