நாட்டில் பி 40 குடும்பத்தைச் சேர்ந்த வறிய நிலையில் உள்ள பிள்ளைகளுக்காக சிறப்பு பள்ளிக் கூடத்தை நிறுவுவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
வறிய நிலையில் உள்ள பிள்ளைகள் வறுமையின் காரணமாக கல்வி வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்பதற்காக இந்த சிறப்பு பள்ளிகளைக் கல்வி அமைச்சு நிறுவ இருக்கிறது. இந்நிலையில், முழுமையானக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் வசதிகளுடன் அப்பள்ளிகள் நிறுவப்படுவதற்குக் கால அவகாசம் தேவைப்படுதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் விளக்கினார்.








