Mar 21, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் சோதனையில் ஒரு மூதாட்டி உட்பட நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் சோதனையில் ஒரு மூதாட்டி உட்பட நால்வர் கைது

Share:

ஜொகூர், மே 10-

ஜொகூர், பொண்டியன்-னில் உள்ள வீடொன்றில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் மூதாட்டி ஆவர்.

இச்சோதனையில் 4.3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பல்வேறு போதைப்பொருட்கள் சந்தேகத்திற்குரிய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக ஜொகூர் போலீஸ் தலைவர் எம் குமார் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணி தொடங்கி பிற்பகல் 12 மணி வரையில் ஜொகூர் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறையுடன் மேற்கொண்ட அச்சோதனையில் 40க்கும் 59க்கும் இடைப்பட்ட வயதுடைய உள்ளூரை சேர்ந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட 75 வயது மூதாட்டி ஒருவரும் கைது செய்யப்பட்டதாக எம் குமார் கூறினார்.

மேலும், ஆறு கார்கள், 21 ஆயிரம் வெள்ளி ரொக்கப்பணம் ஆகியவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அவர் தகவல் வெளியிட்டார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் ஒரு வாரத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்து, அந்த தடுப்பு காவல் இன்றுடன் முடிவடைவதாக எம் குமார் அறிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து