மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, நாட்டின் ஓ.பி.ஆர் வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாகவே நிலைநிறுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் ஓ.பி.ஆர் 3 விழுக்காட்டிலிருந்து 2.75 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது.
தற்போதைய ஓ.பி.ஆர் விகிதம் நாட்டில் விலை நிலைத்தன்மையையும் நீடித்த பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கு ஏற்றதாக இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய கிழக்கு மோதல், புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் உலகளாவிய நிதி நிலைமைகள் போன்றவை உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து சவாலாக இருப்பதாகவும் பேங்க் நெகாரா கூறியுள்ளது.








