Sep 23, 2026
Thisaigal NewsYouTube
3ஆர்' விவகாரம்: திரெட்ஸ் செயலியில் நெகிரி அரச குடும்பத்தை இழிவாகப் பேசிய 52 வயது நபர் கைது
தற்போதைய செய்திகள்

3ஆர்' விவகாரம்: திரெட்ஸ் செயலியில் நெகிரி அரச குடும்பத்தை இழிவாகப் பேசிய 52 வயது நபர் கைது

Share:

சமூக ஊடகமான 'திரெட்ஸ்' செயலியில் மதம், இனம் மற்றும் நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதாக 52 வயது நபர் ஒருவரைப் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் ஒத்துழைப்புடன், இன்று மதியம் 1 மணியளவில் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமது தெரிவித்துள்ளார். அவரிடமிருந்த கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 17 அன்று பதிவிடப்பட்ட இந்த இழிவான கருத்து குறித்து, மறுநாள் புகார்தாரர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்

Related News

3ஆர்' விவகாரம்: திரெட்ஸ் செயலியில் நெகிரி அரச குடும்பத்தை... | Thisaigal News