ஆகஸ்ட் 10 தொடங்கி மலேசிய முழுவதும் அமைந்துள்ள LFS cinema திரேடிங் திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயீலர் திரைப்படம் வெற்றிகரமாக திரையீடு கண்டு வருகிறது.
ஜெயீலர் திரைப்பட திரையீட்டை ஒட்டி ரஜினியின் ரசிகர்களை பரவசத்தில் ஆள்தும் வகையில் லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் சினிமா, PJ மாநிலம் திரையரங்கில் இன்று ஆகஸ்ட் 19 மற்றும் நாளை ஆகஸ்ட் 20 ஆம் ஆகிய 2 தேதிகளில் 24 மணி நேரம் இடைவிடாமல் ஜெயீலர் மற்றும் ரஜினியின் மற்றொரு வெற்றிப்படமான பாட்ஷாவும் திரையிடப்படுகின்றன.
Five Star Trading- யின் ஏற்பாட்டில் இன்று காலை 11:15 மணிக்கு தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி வரை இந்த இரு வெற்றிப்படங்களும் தொடர்ச்சியாக திரையிடப்படவிருக்கின்றன.
மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெரும் நோக்கில் 24 மணி நேரமும் இடைவிடாமல் திரையிடப்படவிருக்கும் ஜெயீலர் மற்றும் பாட்ஷா திரைப்படத்தை ரசிகர்கள் கண்டுக்களிக்கும் அதே வேளையில் இந்த மாபெரும் சாதனை விழாவில் தங்களின் பங்களிப்பும் உண்டு என்பதை நிரூபிக்க ரஜினியின் ரசிகர்கள் பெரியளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மலேசிய வரலாற்றில் முதல்முறையாக நடைபெறவிருக்கும் இந்த அரிய சாதனை நிகழ்வில் ரஜினி ரசிகர்களை மகிழ்விக்க இலவச தேநீர் வழங்கப்படுவதுடன் தனித்துவமான போப்கோன் சாப்பிடும் போட்டியும், 30 வினாடி ரஜினி நடித்த திரைப்படத்தின் கதைக்கூறும் போட்டியும் நடைப்பெறவிருக்கின்றன. இப்போட்டியில் வெற்றிப் பெருகின்றவர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.
இந்த மாபெரும் சாதனை விழாவில் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு Five Star Trading கேட்டுக் கொள்கிறது.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


