Mar 23, 2026
Thisaigal NewsYouTube
வீடு புகுந்து திருடும் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து திருடும் கும்பல் முறியடிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன் 27 -

கடந்த மே 31 ஆம் தேதி கோலாலம்பூர், புக்கிட் டாமன்சாரா - வில் வர்த்தக ஒருவரின் வீட்டில் நுழைந்து 70 லட்சம் வெள்ளி பெருமானமுள்ள பொருட்களை கொள்ளையடித்த லத்தீன் அமெரிக்க பிரஜைகள் நால்வர் உட்பட எட்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின் மூலம் ஆடம்பர பங்களா வீடுகளின் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் வீட்டில் நடந்த கொள்ளையில் பல்வேறு விலை உயர்ந்த 30 கைக்கடிகாரங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் 20 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை இக்கும்பல் கொள்ளையடித்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

உளவுத்துறையின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதிக்கும் 14 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.

எட்டாவது நபருக்கு எதிராக போலீசார் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அந்த சந்தேகப்பேர்வழி தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் பிடிப்பட்டதாக இன்று Brickfields மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ருஸ்டி முகமட் இதனை தெரிவித்தார்.

30க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடையை எட்டு சந்தேகப்பேர்வழிகளில் இருவர் வங்காளதேசிகள் ஆவர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு தங்களின் பெரோடுவா மைவி காரை இவர்கள் வாடகைக்கு தந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Related News