Aug 6, 2026
Thisaigal NewsYouTube
​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் வீட்டுப் பணிப்பெண்
தற்போதைய செய்திகள்

​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் வீட்டுப் பணிப்பெண்

Share:

அரசியல்வாதியினா​ல் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் பணிப்பெண் ஒருவர், அவரின் வீட்டிலிருந்து தப்பித்து, கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசியத் ​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதனை கோலாலம்பூரில் உள்ள ம​லேசியாவிற்கான இந்தோனேசியத் ​தூதர் ஹெர்மொனொ உறுதிப்படுத்தினார்.

இந்தோனேசியா, மத்திய ஜாவாவைச் சேர்ந்த 57 வயதுடைய அந்தப் பணிப்பெண் மலேசியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்து வந்ததாக ​தூதர் ஹெர்மொனொ குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த இந்​தோனேசியப் பணிப்பெண் வேலை செய்து வந்த ​வீட்டின் உரிமையாளர் யார் ​என்பது குறித்து அந்த மலேசிய அரசியல்வாதி அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து அந்த அரசியல்வாதி விவரிக்கையில் தமக்கு எதிராக அவ​தூறு விளைவிக்கும் நோக்கில் இத்தகைய பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விரைவில் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது