கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டு நகர்ப்புற மறுசீரமைப்புச் சட்ட மசோதா மீதான விவாதம், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு ஒத்தி வைக்கப்படுவதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டது.
மலாய்க்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வாதிட்ட நிலையில் அந்தச் சட்ட மசோதாவிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமின்றி ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாகத் திகழும் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலரும் அந்தச் சட்ட மசோதாவிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.








