வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் அரசுப் பணியாளர்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையானது, நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை பாதிக்காது என பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா நாசிர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையானது, COVID-19 காலத்தில் அமல்படுத்தப்பட்ட நடைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், அப்போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நடைமுறையின் முக்கிய நோக்கம், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல், உற்பத்தித்திறன் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அரசுப் பணியாளர்கள் தங்களின் வீடுகள் மற்றும் பிற இடங்களிலிருந்து பணியாற்றினாலும், அவர்களின் பொறுப்புகளை முழுமையாக மேற்கொள்வதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் அக்மால் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.








