ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.29-
கடந்த புதன்கிழமை ஜார்ஜ்டவுன், சுங்கை ஆரா, தாமான் தூனாஸ் மூடாவில் ஓர் ஆசிரியரான தனது மனைவியின் கழுத்தில் கத்தியால் காயப்படுத்திய பின்னர், தன்னையும் காயப்படுத்திக் கொண்ட நபர், கடன் தொல்லையால் அவதியுற்று வந்ததாக போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.
30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், பங்குகளை வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற்றுள்ளார். தவிர e- வாணிகம் வாயிலாக வாங்கிய பொருட்களுக்குத் தவணைப் பணத்தை செலுத்த தவறியுள்ளார்.
இந்நிலையில் மனைவிக்கும், கணவருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆவேசம் அடைந்த அந்த நபர் தனது மனைவியைக் கத்தியால் காயப்படுத்தி விட்டு, தன்னையையும் காயப்படுத்திக் கொண்டுள்ளார் என்று பினாங்கு பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்துள்ளார்.
கடுமையான காயங்களுடன் கணவனும், மனைவியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணவர், மனோவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஏசிபி சஸாலி குறிப்பிட்டார்.








