குவாந்தான், செப்டம்பர்.09-
குவாந்தானைச் சேர்ந்த 55 வயதான ஆசிரியர் ஒருவர், தனது குழந்தைகளுக்கான கல்விச் சேமிப்பு நிதி உட்பட, தன்னிடமிருந்த மொத்த பணத்தையும் மோசடியில் சிக்கி பறிகொடுத்துள்ளார்.
பண மோசடி செய்ததாக தனக்கு வந்த போலியான தொலைப்பேசி மிரட்டலை நம்பிய அப்பெண், தன்னிடம் இருந்த நகைகள், குழந்தைகளின் கல்விச் சேமிப்பு நிதி ஆகியவற்றின் மூலம் மோசடிக்காரர்கள் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில், சுமார் 2 லட்சம் வெள்ளியை அவர் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளதாக குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் அஷாரி அபு சமா தெரிவித்துள்ளார்.








