கோலாலம்பூர், ஜூலை.21-
அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் அரசு பகுதி உதவிப் பெறும் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கச் செல்லும் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் கல்வியமைச்சு நிர்ணயித்துள்ள வழிக்காட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பள்ளிக்கு வருகை தரும் போது ஒவ்வொரு நிகழ்ச்சியும் முறையாக நடத்தப்படுவதை உறுதிச் செய்வதோடு, மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிச் செய்வதற்கு பள்ளி நிர்வாகங்களும் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியமாகும் என்று அமைச்சர் விளக்கினார்.
இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெரிக்காத்தான் நேஷனலின் தானா மேரா எம்.பி. டத்தோ ஶ்ரீ இக்மால் ஹிஷாம் அப்துல் அஸிஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ஃபாட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.








