வீட்டில் நிகழ்ந்த சண்டை கைகலப்பாக மாறியதில் பெண் ஒருவர் தனது தம்பியை கத்தியால் வெட்டி காயப்படுத்தினார். இச்சம்பவம் நேற்று சுங்கை பூலோ, கம்போங் மிலாயுவில் நிகழ்ந்தது. 20 வயது தம்பியை காயப்படுத்திய 30 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கை பூலோ போலீஸ் நிலையத் தலைவர் ஷாஃபா அதோன் அபு பாக்கார் தெரிவித்தார்.
தமது தம்பியை தாக்குதவற்கு அந்தப் பெண் பயன்படுத்திய அரிவாள் கத்தியை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.








