May 24, 2026
Thisaigal NewsYouTube
விளக்கம் பெறப்படும் நடவடிக்கை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

விளக்கம் பெறப்படும் நடவடிக்கை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 20-

மதம், இனம், ஆட்சியாளர் உட்படுத்திய 3R விவகாரம் குறித்து,பெரிக்கத்தான் நசியனால் தலைவர் டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின்-னிடம், இன்று காலை 11 மணிக்கு விளக்கம் பெறவிருந்த நடவடிக்கை புதன்கிழமைக்கு ஒத்துவைக்கப்பட்டிருப்பதாக மலேசியா போலிஸ் படை தலைவர் டான் ஸ்ரீ ரஜருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

முஹ்யித்தீன்-னின் வழக்கறிஞர் தாய்லாந்து நாட்டில் உள்ளதால் இன்று நடைபெறவிருந்த விளக்கம் பெறப்படும் நடவடிக்கை, நாளை காலை 11 மணிக்கு, கோலாலம்பூர், சென்ட்ரல் சாலையில் உள்ள மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA) அலுவலகத்தில் நடைபெறும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை சாடி அவதூறாக முஹ்யித்தீன் பேசியது குறித்து இதுவரை பல்வேறு தரப்பினரிடமிருந்து 30 போலிஸ் புகார்கள் பெறப்பட்டிருக்கும் நிலையில், நிச்சயம் அது குறித்த விசாரணை நடத்தப்படும் என்று டான் ஸ்ரீ ரஜருதீன் உத்தர்வாதம் அளித்துள்ளார்.

Related News