Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஆடவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு

ஜார்ஜ்டவுன், நவ. 21-


பதின்ம வயதுடைய பெண்ணை பாலியல் பலாக்காரம் புரிந்ததாக ஆடவர் ஒருவர் பினாங்கு, ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

23 வயது ஏ.எம்.முகமட் இம்ரான் என்ற அந்த ஆடவர், நீதிபதி இர்வான் சுவாபோன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மே 9 ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஜார்ஜ்டவுன், தஞ்சோங் தொக்கோங்கில் உள்ள பேரங்காடி மையத்தின் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →