கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
நாட்டின் ஒட்டுமொத்த கடன் நிலை குறித்து அரசியல் சர்ச்சைகள் நடந்து வந்தாலும் நாட்டின் புதிய கடன் படிப்படியாகக் குறைந்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நிதிப் பற்றாக்குறை இருக்கும் வரை மொத்தக் கடன் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் இந்த புதிய கடன் குறைப்பு முக்கியமானது என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.
நிதிப் பற்றாக்குறை உண்மையில் சவாலானது. நாட்டின் கடன் விவகாரம் முடிவில்லா அரசியல் விவாதமாக இருந்தாலும் மடானி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நிதிப் பற்றாக்குறையையும் புதிய கடனையும் குறைக்க முயற்சிக்கிறது என பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்ற மேலவையில் 13 ஆவது மலேசியத் திட்ட மசோதாவைத் தாக்கல் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.








