Oct 22, 2026
Thisaigal NewsYouTube

30,000 டீசல் வாகன உரிமையாளர்கள் மாதாந்திர ரொக்கமாக வெ. 200 நாளை முதல் பெறுவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
30,000 டீசல் வாகன உரிமையாளர்கள் மாதாந்திர ரொக்கமாக வெ. 200 நாளை முதல் பெறுவர்

நாளை முதல் 30,000 டீசல் வாகன உரிமையாளர்கள் 200 வெள்ளி மாதாந்திர உதவித் தொகையை Budi Madani - யிடமிருந்து பெறுவர்.

டீசலுக்கான இலக்குரிய உதவித்தொகையை பெறுவதற்கு எந்தவொரு இறுதி நாள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் Budi Individu அல்லது Budi Agri - Komoditi இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.

அதே இணையத்தளத்தின் மூலம் மறுபரிசீலனை அல்லது மேல்முறையீடு விண்ணப்பம் செய்யலாம் என்று அமீர் ஹம்சா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →