மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, தேசிய நீர் கொள்கையின் மூலம் தேசிய நீர் மேலாண்மையை அரசு தொடர்ந்து பலப்படுத்தும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தேசிய நீர் மேலாண்மை, மேம்பாடு தொடர்பான கொள்கைகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை கட்டமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான தளமாக விளங்கும் தேசிய நீர் மன்றத்தின் 5வது கூட்டத்திற்குத் தாம் தலைமை ஏற்றதாக பிரதமர் தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணை தொடர்பான பேரிடர்களின் அபாயத்தைக் குறைப்பதற்காக, அணை தொடர்பான தொழில்நுட்ப மையம் PTEயில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை நியமித்து பாதுகாப்பு குறித்து மேற்பார்வையும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும். என பிரதமர் குறிப்பிட்டார்.
நீர் மாசுபாட்டின் பிரச்சினை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகிறது, மேலும் தேசிய நதி நீர் தர நிலை அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசின் ஒத்துழைப்போடு கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அளவிலான அனைத்து துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.








