Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைத் தொடர்பில் ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

கொள்ளைத் தொடர்பில் ஐவர் கைது

Share:

கிள்ளான், ஜூலை 08-

கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் நிகழ்ந்த கொள்ளைகளில் தொடர்புடையர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருபத்திரண்டு முதல் 32 வயது வரையிலான அந்த ஐவரும் இரவு 8.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லன் வான் மாமதிகூறினார்.
கடந்த வியாழனன்று பூச்சோங்கில் உள்ள ஒரு இல்லத்தில் நிகழ்ந்த கொள்ளை தொடர்பாக 46 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த கொள்ளைச் சம்பவத்தில் அம்மாதுவுக்கு சுமார் 40,000 இழப்பு ஏற்பட்டதாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
சந்தேக நபர்கள் அனைவருக்கும் கடந்தகால குற்றப் பதிவுகள் இருப்பது தொடக்கக் கட்ட சோதனையில் தெரியவந்ததாகக் கூறிய அவர், அக்கும்பலிடமிருந்து கைக்கடிகாரங்கள் மற்றும் கைப்பைகள் போன்ற திருடப்பட்ட சில பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாகச் சொன்னார்.
இந்த கைது நடவடிக்கையின் விளைவாக சுபாங் ஜெயா மாவட்டத்தில் நிகழ்ந்த 15க்கும் மேற்பட்ட வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டதாக காவல்துறை நம்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்