கோலாலம்பூர், ஜூலை.19-
பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா ஆகிய இரு பகுதிகளில் உள்ள இரண்டு வெவ்வேறு வளாகங்களில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் நேற்று மாலை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை ஓப் நோடா எனும் அதிரடிச் சோதனையை நடத்தியது. இச்சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 மலேசியர்கள், 8 சீனப் பெண்கள், 3 மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் பெண்கள், ஜப்பான், ரஷ்யா, வியட்நாம், லாவோஸைச் சேர்ந்த தலா ஒரு பெண் ஆகியோர் அடங்குவர் என அத்துறையின் இடைக்காலத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
இவ்விபச்சாரக் கும்பல்கள் கவர்ச்சியான படங்களுடன் இணையதளங்கள் மூலம் பாலியல் சேவைகளை வழங்கியுள்ளது. மேலும், 400 ரிங்கிட் முதல் 1,000 ரிங்கிட் வரை கட்டணம் வசூலித்துள்ளதாக ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.








