Nov 3, 2025
Thisaigal NewsYouTube
22 நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளை AI தொழில்நுட்பம் கண்டறிந்துள்ளது!
தற்போதைய செய்திகள்

22 நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளை AI தொழில்நுட்பம் கண்டறிந்துள்ளது!

Share:

கோல சிலாங்கூர், நவம்பர்.03-

கடந்த ஜூலை மாதம் முதல் நாடெங்கிலும் உள்ள சுகாதார மையங்களில், நுரையீரல் பரிசோதனைகளில் AI தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, இதுவரை 22 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே நோயைக் கண்டறிய, 7 சுகாதார மையங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 3,778 பேருக்கு, பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், 229 பேருக்கு நுரையீரலில் வளர்ச்சி இருப்பதும், அவர்களில் 22 பேருக்கு அது புற்றுநோயாக மாறியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

AI இன் பயன்பாடு வேகமான மற்றும் துல்லியமான கண்டறிதலைச் செயல்படுத்தியுள்ளதன் மூலம், நோயாளிகள் ஆரம்பகால சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாகவும் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டுள்ளார்.

Related News