Oct 18, 2026
Thisaigal NewsYouTube

53 ஆயிரம் பேருக்கு மொத்தக்கடன் 190 கோடி வெள்ளியாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
53 ஆயிரம் பேருக்கு மொத்தக்கடன் 190 கோடி வெள்ளியாகும்

கோலாலம்பூர், அக்டோபர் 01-

நாட்டில் 30 வயதுக்கு கீழ்பட்ட 53 ஆயிரம் பேருக்கு மொத்தக்கடன் 1.9 bilion அல்லது 190 கோடி வெள்ளியாகும் என்று கடன் நிர்வாக நல்லுறை ஏஜென்சி அறிவித்துள்ளதாக இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலேயே மிகப்பெரிய தொகையில் 53 ஆயிரம் பேரும் கடன் சுமையை கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் வேலை செய்து வருகின்ற மக்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே தங்களின் அடிப்படை தேவைகளுக்காக கடனை பெறுகின்றனர் என்று அந்த ஏஜென்சி குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில் தனிப்பட்ட கடன், கிரேடிட் கார்டு போன்றவற்றுக்கு கடன் பெறுகின்ற மலேசியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்தார்.

இப்போது வாங்குங்கள், பணத்தை பிறகு கொடுக்கலாம் என்ற கடன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து முன்பணமின்றி கடனுக்கு பொருட்களை வாங்கும் மலேசியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பண நிர்வகிப்பில் போதுமான் விழிப்புணர்வும், கட்டொழுங்கும் இல்லாதது 30 வயதுக்கு உட்பட்டவர்களை கடன் சுமை அழுத்தி வருகிறது என்று அமைச்சர் அமீர் ஹம்சா அஜிசான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →