Oct 12, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் பெர்சே தலைவர் ஷாருல் அமான் சாரி காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் பெர்சே தலைவர் ஷாருல் அமான் சாரி காலமானார்

புத்ராஜெயா, ஏப்ரல்.28-

பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஷாருல் அமான் சாரி இன்று காலையில் புத்ராஜெயாவில் உள்ள தேசியப் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தனது 50வது வயதில் காலமானார். இக்ராம் எனப்படும் பெர்துபுஹான் இக்ராம் மலேசியா அமைப்பின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய ஷாருல், புற்று நோயினால் அவதியுற்று வந்தார்.

ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான ஷாருலின் நல்லுடல் செர்டாங், மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா அந்தப் பொறுப்பை விட்டு விலகியதைத் தொடர்ந்து, ஷாருல் பெர்சேவின் தற்காலிகத் தலைவராக 2018 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ஆண்டு இறுதி வரை பணியாற்றினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →