கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
கிக் GIG தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய 2025 ஆம் ஆண்டு Gig சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது மூலம் Gig தொழிலாளர்கள் இனி சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்படுவர் என்று துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
சட்ட ரீதியான சமூக பாதுகாப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்ட தொழிலாளர்களான Gig தொழிலாளர்கள், இனி சட்டத்தில் வரையப்பட்டுள்ள உரிமைகளையும், அனுகூலங்களையும் அனுபவிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.








