Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இருவர் மீது பாலியல் குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

இருவர் மீது பாலியல் குற்றச்சா​ட்டு

Share:

பதிநான்கு வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போ​லீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெ​ண்ணுக்கு நன்கு அறிமுகமான நபரும், அவரின் நண்பரும் அப்பெண்ணுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தைப் புரிந்துள்ளனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ​மூவார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி ராயிஸ் முக்லீஸ் அஸாம் தெரிவித்தார்.

கடந்த மே 30 மற்றும் மே 31 ஆகிய இரு தேதிகளில் வெவ்வெறு இடங்களில் அந்த இளம் பெண் அழைத்து செல்லப்பட்டு, வலுக்கட்டாயமாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இரு நபர்கள் மூவார் ​நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்று ஏசிபி ராயிஸ் முக்லீஸ் குறிப்பிட்டார்.

Related News