Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பொந்தியான் 'கெங் குயாய்' கொள்ளைக் கும்பல் பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

பொந்தியான் 'கெங் குயாய்' கொள்ளைக் கும்பல் பிடிபட்டது

Share:

ஜொகூர், பொந்தியான் பகுதியில் உள்ள 24 மணிநேர அங்காடிகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டு வந்த 'கெங் குயாய்' கும்பலை போலீஸார் முறியடித்தனர். கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி, வெறும் 20 நிமிட இடைவெளியில் பெக்கான் நெனாஸ் மற்றும் பொந்தியான் நகரிலுள்ள இரு கடைகளில் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளைக் காட்டி ஊழியர்களை மிரட்டி இப்பணம் மற்றும் பொருட்களை அவர்கள் திருடினர். இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி இஸ்கந்தர் புத்திரி பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மறைந்திருந்த ஐந்து சந்தேக நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 35 வயதுடையவர்கள் என்றும், அவர்களுக்குக் குற்றப் பின்னணி இருப்பதோடு போதைப்பொருள் சோதனையிலும் 'மெத்தம்பேட்டமைன்' உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் ஹஸ்ரத் ஹுசைன் தெரிவித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை