Dec 3, 2025
Thisaigal NewsYouTube
60 விழுக்காடு வழக்குகள் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவையாகும்
தற்போதைய செய்திகள்

60 விழுக்காடு வழக்குகள் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவையாகும்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் விசாரணை வளையத்திற்குள் இருக்கின்ற பிரபலங்கள் தொடர்புடைய லஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வழக்குகள் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவையாகும் என்று அதன் சிறப்பு செயலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் நலன்சார்ந்தவை என்று கூறப்படும் லஞ்ச ஊழல் தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜுன் 8 ஆம் தேதி வரை 156 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக அதன் மூத்த இயக்குநர் தான் காங் சாய் தெரிவித்துள்ளார். இவற்றில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விசாரணைகளே அதிகமாகும் என்று டான் குறிப்பிட்டார்.

இந்த ல​ஞ்ச ஊழல் விசாரணைகள் தொடர்பில் 211 தனிநப​ர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 91 பேர் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக டான் விளக்கினார்.

Related News