கோலாலம்பூர், ஜூலை.23-
சுற்றுப் பயணியாக மலேசியாவிற்கு வந்த தைவான் நாட்டுப் பெண்ணை மிரட்டிப் பணம் பறித்துள்ளதாகக் கூறப்படும் போலீஸ் குழு ஒன்று மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல், வெறும் பணியிடம் மட்டுமே மாற்றப்பட்டது குறித்து சுற்றுலா, கலை, மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் தாம், நாடு திரும்பியதும், இவ்விவகாரத்தை நேரடியாகப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயிலின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப் போவதாக அறிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் போலீஸ்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, அவர்கள் புரிந்த குற்றங்களின் கடுமைக்கு ஏற்ப அமையவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்கச் செய்து விடும் என்று தியோங் கிங் சிங் குறிப்பிட்டார்.








