Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வாடகைக்கு விடுவீருக்கு எச்சரிக்கை !
தற்போதைய செய்திகள்

வாடகைக்கு விடுவீருக்கு எச்சரிக்கை !

Share:

பிபிஆர் எனப்படும் மக்கள் குடியிருப்புத் திட்டம், ப்ரீமா வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளைப் பெறுகிறவர்கள் அதனை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடக் கூடாது என ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், பொறுப்பற்ற வீட்டு உரிமையாளர்கள் வீட்டை வாடகைக்கு விடும் கலாசாரம் இருக்கும் வரை வீட்டு உரிமைப் பிரச்சினை தீர்ந்துவிடாது எனக் குறிப்பிட்டார்.

100 விழுக்காடு வீட்டு உரிமையை மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் குறிக்கோளாகும். இவ்வாறான பழக்கம் அந்த குறிக்கோளை அடைவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்றார் அவர்.

உண்மையிலேயே வீட்டிற்கானத் தேவை கொண்டவர்கள் அந்த வீட்டிலேயே இருப்பதுதான் சரி எனவும் அமைச்சர் கூறினார்.
ஆனால், வாடகைக்கு விடுவதற்காக பிரிமா வீடமைப்புத் திட்டத்தில் வீட்டை வாங்கினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் சொன்னார்.

Related News