இன்று மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சீன நாட்டின் அரசாங்க செயலாளர் குவான்ஸி மற்றும் அவர் தம் குழுவினரை புத்ரா ஜெயாவில் வரவேற்றார்.
நேற்று இரவு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட சீன அரசாங்க செயலாளார் மற்றும் அவர் தம் குழுவினர், இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற வர்த்தக் உறவைப் பாராட்டியும், மேலும் சில பொருளாதார திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கத்திற்காக மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளனர்.
'இரு நாடு; இரட்டை வளாகம் ' என்ற அடிப்படையில் வர்த்தகக் வளாகங்கள் அமைக்கும் திட்டங்களும் வேலை வாய்ப்புகள் குறித்தும் இரு நாடுகளுகிடையிலான சந்திப்பில் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








