உலு சிலாங்கூர் வட்டாரத்தில் புலி ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக அறியப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து அவ்வட்டார மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட புலி, பத்தாங் காலி - கெந்திங் ஹைலண்ட்ஸிற்கு செல்லும் சாலையின் 18 ஆவது கிலோ மீட்டரில் நடமாடியதை நேரில் பார்த்த உதவி போலீசார் ஒருவர், இது குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை போலீசில் புகார் செய்து இருப்தாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரீம் தெரிவித்தார். அந்த கொடிய விலங்கினத்தை கண்டு பிடிப்பதற்கு வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காவான பெர்ஹிலிதான் உதவியை போலீசார் நாடியிருப்பதாக அவர் குறிப்பட்டார். சம்பந்தப்பட்ட பகுதியில் கேமராக்களை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பவிருக்கிறது. இந்நிலையில் வன நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் அதனை சற்று ஒத்திவைக்குமாறு அஹ்மத் பைசல் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


