ஜார்ஜ்டவுன், ஜூலை.12-
பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் லெபு பந்தாய் சாலையில் மற்றவரின் காரை இரும்புத் தடியால் அடித்துச் சேதப்படுத்திய நபர் ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட ஆடவர், தனது காரிலிருந்து இறங்கி, மற்றொரு காரை இரும்புத் தடியால் அடித்துச் சேதப்படுத்தும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் வேளையில் நேற்று பிற்பகல் 4 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 25 வயது நபர், போலீசில் புகார் செய்து இருப்பதாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் லீ சுவீ சக்கே தெரிவித்துள்ளார்.
பெரோடுவா மைவி காரைச் செலுத்திய சந்தேகப் பேர்வழியின் செயலால் தனது காருக்கு மூவாயிரம் ரிங்கிட் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த இளைஞர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.








