கடந்த 1976 ஆம் ஆண்டு, சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டீபன்ஸ் உட்பட 11 பேர் உயிரிழந்த விமான விபத்து தொடர்பான கூட்டரசு விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம், பகிங்கரப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
47 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கினாபாலுவில் நிகழ்ந்த இந்தக் கோர விமான விபத்தில் உண்மையிலே என்ன நடந்தது என்பது குறித்து அறிய பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், சபா மக்களும் வேட்கை கொண்டிருப்பதை தாம் உணர்ந்த போதிலும், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் அம்பலப்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
முக்கியத் தலைவர் ஒருவர் உயிரிழந்த இவ்விபத்து தொடர்பான, விசாரணை அறிக்கை 1972 ஆம் ஆண்டு ரகசிய காப்புச்சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வெளிப்படையான போக்கைக் கொண்டிருப்பதால், அதன் உள்ளடக்கம் பகிங்கரப்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி கூறினார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


