சந்தையில் கோழியின் விலை இன்னும் கிலோவிற்கு 9 ரிங்கிட் 40 காசுக்கு விற்கப்பட்டு வருவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார அமைச்சின் துணை அமைச்சர் ஃபுசியா சாலெஹ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி இதே விலையில் கோழிகள் விற்கப்பட்டு அதன் விலை ஏற்றம் காணாது இருப்பது நேர்மறையான விசயம் என கூறிய துணை அமைச்சர், சந்தையில் 9.40 காசுக்கு மேல் கோழிகளை விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் நாடு முழுக்க உள்ள 900 அதிகாரிகள் சந்தையில் விற்கும் அத்தியாவசப் பொருட்களின் விலைகளைக் கண்காணித்து வருகின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








