Jun 9, 2026
Thisaigal NewsYouTube
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி
தற்போதைய செய்திகள்

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

Share:

சுங்கை பூலோ, மே.24-

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு அரசாங்கம் புதிய உத்வேகம் அளித்து வருகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமது நாடாளுமன்றத் தொகுதியான சுங்கை பூலோவில் நேற்று நடைபெற்ற கிராப் பங்காளர்களின் பாராட்டு விழாவில் பேசிய டத்தோ ஸ்ரீ ரமணன், தொழிலாளர்களின் பொருளாதார மீள்திறனுக்காக 20 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘பேஸ்’ (PACE) திட்டமும், ஏஐ (AI) சார்ந்த திறன்களுக்காக 110 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘மை மாஹிர்’ திட்டமும் அமல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கிக் தொழிலாளர்கள் ‘ஏடிதெக்’ (ADTEC) மையங்கள் வழி தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெறலாம் என்றும், வேலை வாய்ப்புகளுக்கு பெர்கேசோவின் 'MYFutureJobs' தளத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் புகார்களைத் தெரிவிக்க 'இ-புகார்' பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. நீடித்த கிக் சூழலை உருவாக்க அரசாங்கம், நிறுவனங்கள், தொழிலாளர்கள் என மூத்தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன், அங்கு வந்திருந்த கிராப் பங்காளர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

Related News

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்