Oct 5, 2026
Thisaigal NewsYouTube

மரத்தோன் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவரை காயப்படுத்திய மோட்டார் சைக்கிளோட்டி மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மரத்தோன் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவரை காயப்படுத்திய மோட்டார் சைக்கிளோட்டி மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர் ஸ்டண்டர்ட் சார்டட் மரத்தோன் போட்டியில் பங்கேற்ற இருவரைக் காயப்படுத்திய விபத்து தொடர்பில், 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி மீது இன்று கோலாலம்பூர் போக்குவரத்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

1987 சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவின் கீழ், மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரிங்கிட் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரிங்கிட் 5,000 பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதைச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் அவர், கோலா குபு பாரு சிறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. வழக்கு மீண்டும் ஜனவரி 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர், ஜாலான் முன்ஷி அப்துல்லாவில், போக்குவரத்துக் கூம்புகளால் குறிக்கப்பட்டிருந்த மரத்தோன் பாதையைக் கடக்க முயன்றபோது சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி போட்டி பங்கேற்பாளர்களை மோதியதாக கூறப்படுகிறது.

இதில் 50 வயது பெண் ஓட்டப்பந்தய வீரருக்கு கழுத்திலும், 41 வயது ஆண் வீரருக்கு வலது முழங்கால் மற்றும் கையிலும் காயம் ஏற்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →