Aug 6, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் விற்பனை நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் விற்பனை நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்

Share:

ஜன. 3-

பண்டார் சன்வேயில் நடந்த புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் விற்பனை நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். சிலர் ekstasi மாத்திரைகளை உட்கொண்டதும், மது அருந்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாத்திரை ஒன்று 50 ரிங்கிட்டுக்கும், மூன்று மாத்திரைகள் 100 ரிங்கிட்டுக்கும் விற்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Hussein Omar Khan குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததாக Hussein Omar Khan குற்றம் சாட்டினார். காவல் துறையின் பாதுகாப்பு வளாகத்திற்கு வெளியே மட்டுமே இருந்தது என்றும், வளாகத்திற்குள்ளான பாதுகாப்பு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

இசை நிகழ்ச்சிக்குச் சென்ற நான்கு பேர் எக்ஸ்டசி மாத்திரைகளை உட்கொண்டதால் இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த சம்பவம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்துகிறது.

உண்மையான மரண காரணத்தை கண்டறிய நச்சுயியல் அறிக்கைகளுக்காக காவல் துறையினர் காத்திருக்கின்றதாகக் கூறிய Hussein, இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறதாகவும் தெரிவித்தார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’