Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குவைத்திலிருந்து போர் விமானங்கள் வாங்குவது குறுகிய காலத் திட்டம் மட்டுமே - தற்காப்பு அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

குவைத்திலிருந்து போர் விமானங்கள் வாங்குவது குறுகிய காலத் திட்டம் மட்டுமே - தற்காப்பு அமைச்சர் தகவல்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

குவைத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட F/A-18 போர் விமானங்களை வாங்கும் திட்டம், தற்காலிகமானது தான் என்று தற்காப்பு அமைச்சு டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் மலேசிய விமானப் படையில் திறன் இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு குறுகிய கால நடவடிக்கை மட்டுமே என்று நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மேம்படுத்தப்பட்ட விமானங்களை வாங்குவதற்கான மலேசியாவின் நீண்டகால இலக்கில் எந்த வித மாற்றமும் இல்லை என்றும் காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், 14வது மலேசியா திட்டத்தின் கீழ் பல்வேறு போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News